தமிழ்நாடு

புதிய கொரோனா தொற்று பரவல்.. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள முடிவு என்ன?

Published

on

சீனாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இந்த புதிய கொரோனா தொற்றைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை ஒன்றை வியாழக்கிழமை நடத்தியுள்ளார்.

அதில் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற கோவிட் அறிகுறிகளைக் கொண்ட பயணிகளை விமான நிலையத்தில் நிறுத்தி பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிஎஃப்.7 வகை கொரோனா தொற்று 4 பேரிடம் கண்டறிந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அதில் 3 பேர் குஜராத்திலும் ஒருவர் ஒரிசாவிலும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா தொற்று பாதித்த இந்த 4 நபர்களுக்கு அதிக காய்ச்சல் போன்ற எந்த ஒரு அறிகுறிகளும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை பெரும்பாலானவர்கள் போட்டுக்கொண்டதால், இந்தியர்களுக்குக் கலப்பின கொரோனா தொற்று நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது. எனவே யாரும் பீதியடைய வேண்டாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

seithichurul

Trending

Exit mobile version