தமிழ்நாடு

மீண்டும் பரவும் கோவிட்… பூங்காக்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய புதிய நடத்தை விதிமுறைகள்!

Published

on

கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் பூங்காக்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய புதிய நடத்தை விதிமுறைகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1) வெளியே செல்லும் போது மறுபடியும் பயன்படுத்தக் கூடிய முகக் காசத்தை அணியவும்.
2) அடுத்தவர்களைத் தொடாமல் உரையாடுங்கள்.
3) மற்றவர்களிடம் இருந்து ஒரு மீட்டர் தனிநபர் இடைவெளியைப் பின்பற்றவும்.
4) உங்கள் முகத்தையோ, முகக் கவசத்தையோ முன்புறத்திலிருந்து தொட வேண்டாம்.
5) வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன் கைகளைக் கழுவுங்கள். கிருமிநாசினியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.


6) வீடு திரும்பியவுடன் சாவிகள், கைப்பேசி போன்ற உபகரணங்களைத் தூய்மைப் படுத்தவும்.
7) கோவிட் தொடர்புடைய அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், 1075 அல்லது மாநில உதவி எண்ணை உடனடியாக தொடர்புகொள்ளவும்.
8) அதிக அளவில் கூட வேண்டாம்.
9) பூங்காவில் உண்ண வேண்டாம், குப்பை போட வேண்டாம்.
10) வெறும் கையால் எதையும் தொட வேண்டாம்.
11) உங்கள் பொருட்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
12) எச்சில் துப்ப வேண்டாம். பொது இடங்களில் எச்சில் துப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

seithichurul

Trending

Exit mobile version