இந்தியா

புதிய ஊரடங்கு கட்டுப்பாட்டில் மத்திய குறிப்பிட்டுள்ளவை என்ன?

Published

on

கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு உத்தரவைப் பிரதமர் மோடி மே 3-ம் தேதி வரை நேற்று நீட்டிப்பதாக அறிவித்தார். மேலும் அதில் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு சில கட்டுப்பாடுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும், அதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

அதன்படி, புதிய ஊரடங்கு கட்டுப்பாட்டில் மத்திய குறிப்பிட்டுள்ள விதிகள் என்ன என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

1) பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
2) நாடு முழுவதும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும் போது, பணியில் உள்ள போது மாஸ் அணிவது கட்டாயம்.
3) 65 வயதுக்கும் அதிகம் உள்ள முதியவர்கள் மட்டும் 5 வயதுக்குக் கீழ் குழந்தை உள்ள வீடுகளில் வேலைக்குச் செல்பவர்கள், வீட்டிலிருந்தே பணியாற்றலாம்.
4) பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சு வேலை, மெக்கானிக் தொழில் செய்வோர் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
5) சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் தங்களது பணிகளைத் தொடரலாம். ஆனால் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்டவை கடைப்பிடிக்க வேண்டும்.
6) ஊரக வேலை வாய்ப்பு திட்டங்கள் பணிக்குச் செல்லலாம். ஆனால், முகக்கவசம் சமூக இடைவெளி அவசியம்.
7) மே 3-ம் தேதி வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிப்பாட்டுத் தலங்கள், பொதுக்கூட்டங்களுக்குத் தடை தொடரும்.
8) நெடுஞ்சாலைகளில் உள்ள உணவுகளைத் திறக்கலாம்
9) ரயில், விமானம், பேருந்து போக்குவரத்துகள் இயங்காது.
10) கட்டுமான பணிகள் தொடரலாம். ஆனால், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்கு இந்த விதி பொருந்தாது.
11) சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் செயல்படும் தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் குறைந்த ஊழியர்களுடன், மாஸ் மற்றும் சமூக இடைவெளியுடன் செயல்படலாம்.
12) அரசு சேவைகள் வழங்கும் கால் செண்டர்கள் திறக்கலாம்.
13) மாநில எல்லைகள் இடையிலான மக்கள் போக்குவரத்து முடக்கப்பட்டே இருக்கும்.
14) மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள் தொடர்ந்து செயல்படலாம்.
15) பொது இடங்களில் 5 பேருக்கும் அதிகமாக கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
16) தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

seithichurul

Trending

Exit mobile version