இந்தியா

ஆந்திராவில் 15 மடங்கு ஆபத்தான கொரோனா கண்டறிந்துள்ளதாக தகவல்- உஷார் மக்களே!

Published

on

இந்திய அளவில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு நாளைக்கு சுமார் 3 லட்சத்துக்கும் அதிமானவர்கள் இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இப்படியான சூழலில், ஆந்திராவில் 15 ஆபத்தான மாறுபட்ட, உருமாறிய கொரோனா தொற்று வகை இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த வகை கொரோனா வைரஸ், N440K எனக் கூறப்படுகிறது.

இந்த வகை தொற்று தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல். தென் மாநிலங்களில் N440K வகை மெதுவாக அழிந்து, B.1.1.7 & B.1.617 வகைகள் பரவி வருகிறது என்று சொல்லப்படுகிறது.

இந்த புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று குறித்து மத்திய அரசு தரப்பிலோ, எந்த மாநில அரசுகள் தரப்பிலோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version