இந்தியா

மின்னல் வேகத்தில் பரவும் உருமாறிய கொரோனா; 10 மாநிலங்களுக்கு வல்லுநர் குழுவை அனுப்பிய மத்திய அரசு!

Published

on

இந்தியாவில் கடந்த ஒரு வார காலமாக புதுவகை கொரோனா வைரஸ் தொற்று கிடு கிடுவென பரவி வருகிறது. இந்த புதுவகை தொற்று முன்பை இருந்த கொரோனா தொற்றை விட மிக அதிவேகமாக பரவும் அபாயம் உள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பு சில நாட்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் இந்த புதிய உருமாறிய கொரோனா தொற்று மூலம் நாட்டில் சுமார் 7,000 பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று அதிர்ச்சியளிக்கும் தகவலைத் தந்துள்ளது CCMB விஞ்ஞானிகள் அமைப்பு. இப்படி உருமாறிய கொரோனா தொடர்பாக அடுத்தடுத்து அதிர்ச்சிகர தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு, இந்த கொரோனா தொற்று இருக்கும் 9 மாநிலங்களுக்கு வல்லுநர் குழுவை அனுப்பியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

அந்த வகையில் மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப், கர்நாடகா, தமிழகம், மேற்கு வங்கம் மற்றும் ஜம்மூ – காஷ்மீருக்கு வல்லுநர் குழுவை அனுப்பி, உருமாறிய கொரோனா தொற்றுப் பரவல் குறித்து ஆய்வு நடத்த அறிவுறுத்தியுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றுப் பரவல் விதிமுறைகளை முடுக்கிவிடவும், அதிக சோதனைகளை மேற்ளொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தற்போது நாட்டில் இருக்கும் கொரோனா ஆக்டிவ் கேஸ்களில் 75 சதவீதம் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் மட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரு மாநிலங்களில் கடந்த சில வாரமாக ஆக்டிவ் கேஸ் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இன்று மட்டும் மகாராஷ்டிராவில் 6,218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைப் போலவே கேரளாவில் 4,034 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version