தமிழ்நாடு

பிரிட்டனில் இருந்து சென்னை வந்தவருக்கு புதிய வகை கொரோனா – சுகாதாரத்துறை செயலாளர் அவசர ஆய்வு

Published

on

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் சூழலில், இங்கிலாந்தில் புதிதாக வைரஸ் ஒன்று அதிவேகமாக பரவி வருவதால், அந்நாட்டு மக்கள் கலக்கத்தில் உள்ளனர். அங்கு வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள தலைநகர் லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தி பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சூழலில், அந்த நாட்டுக்கான விமான சேவையை இன்று (டிச.22) நள்ளிரவு முதல் 31-ம் தேதி வரை மத்திய அரசு தடை செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை ஏன்? முழு விவரம் இங்கே

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், “பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். லண்டனில் இருந்து சென்னைக்கு 3 விமானங்கள் வந்துள்ளன.

பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நபர் வீட்டு தனிமையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார். கொரோனா உறுதியான நபரின் சளி மாதிரி புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சளி மாதிரி ஆய்வுக்கு பிறகே வீரியமிக்க கொரோனாவா அல்லது வீரியமில்லாத கொரோனாவா என்பது தெரியவரும்.

இங்கிலாந்தில் இருந்து கடந்த 10 நாட்களில் தமிழகம் வந்தவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படும். வெளிநாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். பொதுமக்கள் முககவசம் அணிவது, தனி மனித இடைவெளி உள்ளிட்ட வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version