தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் புதிய மாற்றங்கள்: பிற மாநிலத்தவர்களுக்கு ஆப்பு!

Published

on

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் பிறமாநில விண்ணப்பதாரர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை பிற மாநிலத்தவர்கள் எழுதி அதிக அளவில் பணி நியமனம் பெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில் தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இனி நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முதல் தேர்வாக தமிழ் பாடத்தாள் இடம் பெறும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த தமிழ் பாடத்தாளில் குறைந்த பட்சம் 45 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அடுத்த தேர்வுகளை எழுத முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மதிப்பீடு செய்யும் வகையில் புதிய டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நடைமுறை மாற்றம் காரணமாக தமிழ் மொழி அல்லாதவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது என்பதால் முழுக்க முழுக்க தமிழர்கள் மட்டுமே பணி நியமனம் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

டிஎன்பிஎஸ்சியின் இந்த புதிய தேர்வு முறைக்கு தமிழக மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version