தமிழ்நாடு

அண்ணாமலை இலங்கையில் இருக்கும்போது தமிழக பாஜகவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

Published

on

தமிழக பாஜக தலைவர் தற்போது இலங்கையில் இருக்கும் நிலையில் திடீரென தமிழக பாஜக நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பாஜக நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழக பாஜகவின் மாவட்ட தலைவர்கள் செயற்குழு உறுப்பினர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழக பாஜகவின் 59 மாவட்ட தலைவர்கள் 20 மாநில செயற்குழு உறுப்பினர்கள் புதிய பட்டியல் தற்போது இடம்பெற்று உள்ளது. மேலும் அண்ணாமலை தமிழகம் திரும்பிய பிறகு மாநில துணை தலைவர்கள் புதிய பட்டியல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

தமிழக பாஜக தலைவர் இலங்கையில் இருந்தாலும் தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியலை தேர்வு செய்து வெளியிட்டுள்ளதாக பாஜக மேலிடம் தெரிவித்துள்ளது .

இந்த நிலையில் இலங்கையில் உள்ள பொருளாதார நிலை குறித்து நேரடியாக ஆய்வு செய்து வரும் அண்ணாமலை அங்கு உள்ள சீதை கோயிலுக்கும் சென்று வழிபாடு செய்துள்ளார் என்பதும் அது குறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version