இந்தியா

ரத்து செய்யப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டம்: மத்திய அரசு!

Published

on

மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமல்படுத்திய 3 வேளாண்மை சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசு அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநில விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தின் பயனாக சமீபத்தில் பிரதமர் மோடி அவர்கள் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதனை அடுத்து விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெற்றதை அடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வகையில் புதிய மசோதா உருவாக்கப்பட்டு அந்த மசோதா பிரதமர் அலுவலகத்துக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் நிலையில் அதற்கு பதிலாக அமல்படுத்தப்படும் புதிய வேளாண் சட்டங்களுக்கும் விவசாயிகள் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்புமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

seithichurul

Trending

Exit mobile version