இந்தியா

இந்தியாவில் நுழைந்த புதிய கொரோனா வைரஸ்: பொதுமக்கள் அச்சம்!

Published

on

இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது என்பதும் இதனால் கோடிக்கணக்கான பாதிக்கப்பட்டனர் என்பதும் லட்சக்கணக்கான உயிரிழந்தனர் என்பது தெரிந்ததே.

அதுமட்டுமின்றி ஏழைம் எளிய நடுத்தர மக்கள் மட்டுமின்றி பணக்காரர்களும் திண்டாடும் வகையில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டது என்பதும், தற்போது தான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி உள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகின் பல நாடுகளில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்ட போதிலும் இந்தியாவில் சுமார் 100 கோடிக்கும் மேல் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதால் மூன்றாவது அலைக்கான அறிகுறி இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதும் பொது மக்களின் நிம்மதிக்கு சான்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திடீரென ஒரு அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது. இதன்படி இந்தியாவில் புதிய வகை வைரஸ் ஒன்று பரவி வருவதாக வெளி வந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் பரிணாம வளர்ச்சி பெற்ற AY 4.2 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று தற்போது இந்தியாவிலும் பரவி உள்ளதாக தெரிகிறது.

பெங்களூரை சேர்ந்த இரண்டு பேருக்கு AY 4.2 என்ற வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் பெங்களூர் மற்றும் அச்சமடைந்துள்ளனர். இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு மற்றும் கர்நாடக மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version