வணிகம்

உஷார்.. இன்று முதல் இந்த ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்கள் உயர்வு!

Published

on

இந்திய ரிசர்வ் வங்கி, அண்மையில் சில ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை வங்கிகள் உயர்த்திக்கொள்ள அனுமதி அளித்தது.

நீண்ட காலமாக சில ஏடிஎம் பரிவர்த்தனைகளின் கட்டணத்தை உயர்த்த அனுமதி வேண்டும் என, வங்கி நிறுவனங்கள் மற்றும் ஏடிஎம் சேவை வழங்கும் நிதி நிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்து வந்தன.

அதற்கு அண்மையில் அனுமதி அளித்த இந்திய ரிசர்வ் வங்கி புதிய கட்டணம் எவ்வளவு என்றும் அறிவித்தது.

2021, ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து வங்கி வாடிக்கையாளர்கள், தங்களது இலவச ஏடிஎம் பரிவர்த்தனை அளவை மீறிப் பிற வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்தால் 15 ரூபாய் செலுத்த வேண்டும் என இருந்த கட்டணம் 17 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

பணம் எடுக்காமல் வங்கிக் கணக்கில் உள்ள இருப்பு உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்த்தால், 5 ரூபாய் என இருந்த கட்டணம் 6 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது.

ஏடிஎம் இயந்திரங்களைச் சம்மந்தப்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் பிற வங்கி வாடிக்கையாளர்களும் பயன்படுத்தலாம். ஒரு வங்கி ஏடிஎம் சேவையைப் பிற வங்கி வாடிக்கையாளர்கள், அந்த வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இலவச வரம்பை மீறிக் கூடுதல் பரிவர்த்தனை செய்யும் போது interchange கட்டணம் வசூலிக்கப்படும்.

seithichurul

Trending

Exit mobile version