உலகம்

தலிபான்களை எதிர்க்க புதிய படை.. ஆப்கான் துணை அதிபர் அதிரடி!

Published

on

தலிபான்களை எதிர்க்க புதிய கொரில்லா படை மற்றும் ராணுவம் தயாராகி வருகிறது என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

தலிபான்களிடம் அடிபணியப் போவதில்லை என்று கூறிய ஆப்கான் துணை அதிபர் அம்ருல்லா சாலே, தன் குருநாதர் அகமதுஸாதின் மகன் அகமது மசூத் உடன் இணைந்து பங்ஷீர் மலைப் பகுதியில் தலிபான்களுக்கு எதிரான கொரில்லா படையைத் தயார் செய்து வருவதாகவும், போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கான் நாட்டை விட்டு வெளியேறி ஐக்கிய அமீரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.

தாலிபான்கள் ஆட்சி என்பது மிகவும் பழைமை வாய்ந்தது. பெண்கள் படிக்கக் கூடாது, வெளியே வந்தால் தனியாக வரக்கூடாது போன்ற பழமையான சிந்தனைகளைக் கொண்டது. எனவே, அந்நாட்டுக்கள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தாலிபான்கள் பெண்கள் படிக்கவும், வேலைக்குச் செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஊடகத்தில் பணிபுரியும் அனைத்து பெண் பத்திரிகையாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version