சினிமா செய்திகள்

நெட்பிளிக்ஸ், அமேசானுக்கு எதிரான மத்திய அரசின் மனு தள்ளுபடி

Published

on

ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களான நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோ போன்றவற்றில் வரும் ஒரிஜினல்ஸ் மற்றும் வெப் தொடர்களில் அதிகப்படியான ஆபாச காட்சிகள், முழு நிர்வாண காட்சிகள், ஆபாச வசனங்கள் இடம் பெறுகின்றன.

170 நாடுகளில் நெட்பிளிக்ஸ் ஒளிபரப்பு செய்யப்படுவதால், அத்தனை நாட்டு கலாசார மொழி படங்களும், எந்த நாட்டினரும் காணும் படி கிடைக்கின்றன.

இதனை ஒழுங்கு முறை படுத்த வேண்டும். இந்தியாவிற்கு என கட்டுப்பாடுகள் உண்டு என்றும், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்றவற்றை கண்காணிக்கவும் தணிக்கை செய்யவும் குழு அமைக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட மனுவை டில்லி உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்து தள்ளுபடி செய்துள்ளது.

ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் மத்திய அரசிடம் இருந்து எந்தவொரு தனித்துவமான உரிமத்தையும் பெற தேவையில்லை என்ற வர்த்தக விதி உள்ளதால், அதனை தணிக்கை செய்யும் உரிமையையும் மத்திய அரசு பெற முடியாது என வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் மற்றும் நீதிபதி வி.கே. ராவ் மத்திய அரசின் மனுவை நிராகரித்தனர்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்யப்படுமா அல்லது கைவிடப்படுமா என்பது விரைவில் தெரியவரும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version