தமிழ்நாடு

கலாய்த்தது கூட தெரியாமல் விளக்கம் அளித்த குஷ்பு! நெட்டிசன்கள் கிண்டல்

Published

on

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு திமுகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கும் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கும் தாவினார் என்பது தெரிந்ததே. தற்போது அவர் பாஜக வேட்பாளராக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் டுவிட் ஒன்றை பதிவு செய்திருந்தார். அந்த ட்விட்டில் அவர் கூறியிருப்பதாவது: இன்று தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களின் உற்சாகத்தோடு வேட்புமனு தாக்கல்செய்தேன். உடன் மத்திய இணைஅமைச்சர் திரு கிஷன்ரெட்டி அவர்களும் அமைச்சர் அண்ணன் ராதாகிருஷ்ணன் அவர்களும் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் மகேந்திரன் அவர்களும் கலந்துகொண்டனர்.

இந்த டுவிட்டை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். குஷ்பு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு இருக்கும் நிலையில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தேன் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது.

இதனை அடுத்து நெட்டிசன்களின் கேலி, கிண்டலுக்கு விளக்க்மளித்த குஷ்பு, ‘இது திமுக அல்ல தம்பி, சிட் பேப்பரை வைத்து தப்பு செய்ய’ என்று பதிவு செய்திருந்தார். எல் முருகன் அவர்கள் பதிவு செய்த ட்வீட்டை அப்படியே காப்பி பேஸ்ட் செய்ததை நெட்டிசன்கள் கிண்டல் அடித்தது கூட தெரியாமல், குஷ்பு விளக்கம் அளித்திருப்பது மேலும் நகைச்சுவைக்குரியதாக இருக்கிறது இதனை அடுத்து குஷ்புவை தொடர்ந்து நெட்டிசன்கள் காத்து வருகின்றனர்.

 

 

seithichurul

Trending

Exit mobile version