சினிமா

இனிமே கவர்ச்சி காட்டாதீங்க தர்ஷா! இப்படியே திறமையை இன்ஸ்டாகிராமிலும் காட்டுங்க; நெட்டிசன்கள் கலாய்!

Published

on

ஓடாத ஓ மை கோஸ்ட் படத்துக்கு அந்தர் பல்டி எல்லாம் அடித்து ப்ரமோஷன் செய்து வருகிறார் குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா என நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் அந்தர் பங்கம் செய்து வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் அதுவுமா ஏன்மா இப்படி கவர்ச்சியா டிரெஸ் பண்ணினே என பத்திரிகையாளர்கள் நாக்கை பிடுங்கிற மாதிரி கேள்வி கேட்டதும், என்னையே ஏன் டார்கெட் பண்றீங்க நான் எவ்வளவு நல்ல பொண்ணு தெரியுமா என அழுது ஒப்பாரியே வைத்து விட்டார்.

இந்நிலையில், மீண்டும் ஓ மை கோஸ்ட் படத்துக்காக காலையில் இருந்து பச்சை தண்ணிக் கூட குடிக்காமல் ரோப் கட்டி பறந்தேன் என ஷூட்டிங்கில் எடுத்த BTS வீடியோவை எடுத்து போட்டு இப்பவாவது நான் நடிச்சிருக்க ஓ மை கோஸ்ட் படத்தை பார்க்க வாங்க என கதறி வருகிறார் என ஆன்லைன் ஆபத்துகள் ஆப்பு அடித்து வருகின்றனர்.

”இந்த வீடியோ,’கவர்ச்சியை தாண்டி உங்களின் உழைப்பையும் நடிப்புத் திறனையும் காட்டுங்கள்’ என்று கூறிய அனைவருக்கும் இந்த OMG படத்தின், BTS வீடியோவை சமர்ப்பிக்கிறேன். Didn’t had little water also from morning till eve 6pm for dis scene. Nothing happens so easily without hardwork” என ட்வீட் போட்டு தர்ஷா குப்தா வெளியிட்ட வீடியோவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் அவரது ஹார்ட்டை உடைக்க வேண்டும் என விரும்பும் சில விஷமிகள் நீங்கள் இன்ஸ்டாகிராமிலும் இதே போல இனிமேல் கவர்ச்சி காட்டாமல் திறமையை காட்டி லைக்ஸ் அண்ட் ஃபாலோயர்ஸை கூட்டுங்க தர்ஷா குப்தா என கமெண்ட் போட்டு பங்கம் பண்ணி உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version