இந்தியா

பட்ஜெட் உரையே முடியல… அதுக்குள்ள இப்படியா… வரிந்துகட்டி மீம்ஸ் பறக்கவிட்ட நெட்டிசன்ஸ்!!

Published

on

2021 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டடை, இன்று தாக்கல் செய்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட்டில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து தற்போது தான் விவாதிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்குள் பட்ஜெட்டின் குறைகளை ட்ரோல் செய்து மீம்ஸ் பறக்க விட்டு வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

இன்றைய பட்ஜெட்டில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு வெளியான அறிவிப்புகள்:

1. குறைந்த விலையில் வீடு வாங்குவோருக்கான வட்டி வரிச்சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு

2. வங்கி வட்டி, ஓய்வூதியத்தை நம்பியுள்ள 75 வயதிற்கு மேற்படோர் வருமான வரி செலுத்த தேவையில்லை

3. நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை டிஜிட்டல் முறையில் செய்ய ரூ.3,765 கோடி ஒதுக்கீடு

4. எல்.ஐ.சி. பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்க முடிவு. பொதுத் துறை வங்கிகளில் சிலவற்றையும் விற்க முடிவு. ஏர் இந்தியா நிறுவனத்தையும் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது

5. விளை பொருட்களின் குறைந்தபட்ச கொள்முதல் விலை ஒன்றரை மடங்கு அதிகரிப்பு

6.நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என்னும் காரணத்திற்காக, இந்த ஆண்டு பட்ஜெட்டில் 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

இப்படி வெளியான பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து வெளியான மீம்ஸ் தொகுப்பு இதோ:

seithichurul

Trending

Exit mobile version