தமிழ்நாடு

‘ஒருத்தணும் அலகும் குத்தல, வேலும் குத்தல’- தைப்பூசத்துக்கு காவடி எடுத்த பாஜக தலைவர்கள்; வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

Published

on

இன்று உலகெங்கும் இருக்கும் முருகன் கோயில்களில் தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தைப்பூசத்தையொட்டி, தமிழக பாஜக தலைவர்கள் பழனியில் காவடி ஏந்தி சென்றுள்ளது விமர்சனத்துக்கு உள்ளானது.

சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், பல்வேறு கட்சிகளும் முருகனை வழிபடுவது மற்றும் வேல்களை தங்கள் கட்சி மேடைகளில் தூக்கிப் பிடிப்பது உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சில நாட்களுக்கு முன்னர் திருத்தணியில் கட்சி சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது முருகனின் ஆயுதமாக இருக்கும் வேல் ஒன்றை அவரிடம் திமுகவினர் கொடுத்தனர். அதை உயர்த்திப் பிடித்தார் ஸ்டாலின். பொதுவாக மதம் சார்ந்த விஷயங்களில் இருந்து விலகியிருக்கும் ஸ்டாலின், வேலை உயர்த்திப் பிடித்தது தமிழக அரசியல் தளத்தில் விவாதப் பொருளானது. அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதைப் போலவே சில மாதங்களுக்கு முன்னர் முருகனின் அறுபடை வீடுகளை முதன்மைப்படுத்தி, அரசியல் ரீதியான ‘வேல் யாத்திரையை’ நடத்தியது தமிழக பாஜக. அது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் நேற்று பழநி மலையில் உள்ள முருகன் கோயிலுக்கு, காவடி ஏந்திச் சென்றுள்ளனர் தமிழக பாஜக தலைவர்கள். குறிப்பாக தமிழக பாஜகவின் தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் இந்த காவடி ஏந்தும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பொதுவாக முருக பக்தர்கள், காவடி எடுத்தால், முதுகில் அலகு குத்தி, நாக்கில் வேல் குத்தி, வெறும் உடம்பில் பாதை யாத்திரை செல்வார்கள். இப்படி எதையும் செய்யாமல் வெறுமனே காவடியை மட்டும் ஏந்திக் கொண்டு பாஜகவின் சென்றது சர்ச்சைக்கு உள்ளானது. அதேபோல பாஜகவின் முக்கியப் பொறுப்பாளர்களான கே.டி.ராகவன், எச்.ராஜா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாததும் நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

பாஜகவை விமர்சித்த சில பதிவுகள் இதோ:

 

seithichurul

Trending

Exit mobile version