சினிமா

இதலாமா போட்டோவா போடுவீங்க!.. பீஸ்ட் பட நடிகையை திட்டி தீர்த்த நெட்டிசன்கள்…

Published

on

தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான முகமுடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அப்படத்திற்கு பின் தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, அம்மணி தெலுங்கு பக்கம் ஒதுங்கினார். அங்கு பல வருடங்கள் போராடி தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘அல வைகுந்தபுரமுலோ’ படம் தெலுங்கில் மாஸ் ஹிட்.தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அவர் நடித்து வருகிறார்.

pooja hedge

தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, நெல்சன் இயக்கி வருகிறார்.

ஒருபக்கம் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அப்படி அவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், கொட்டாவி விடும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ‘கொட்டாவி ஒரு தொற்று நோய் இல்லையா?’ என பதிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘கொட்டாவி விடுவதை எல்லாமா போட்டோ போடுவீங்க’ என அவரை திட்டி வருகின்றனர்.

 

Trending

Exit mobile version