தமிழ்நாடு

குஷ்புவின் டுவிட்டுக்கள் வேண்டுமென்றே காலி செய்யப்பட்டதா?

Published

on

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் டுவிட்டர் பக்கம் சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டதாகவும் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் இருந்த ட்வீட்டுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

மேலும் இது குறித்து நடிகை குஷ்பு சமீபத்தில் டிஜிபி சைலேந்திரபாபு அவர்களை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குஷ்புவின் டுவிட்டர் பக்கத்தில் உள்ள டுவிட்டுக்கள் அனைத்தும் வேண்டுமென்றே காலி செய்யப்பட்டு இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் கசிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும் திமுகவில் இருந்த போதும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார் என்றும் அந்த ட்வீட்டுகள் அனைத்தும் தற்போது அவருடைய டுவிட்டர் பக்கத்தில் இருப்பதால் அந்த பழைய டுவிட்டகளை எடுத்து நெட்டிசன்கள் அவ்வப்போது கேலி செய்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமன்றி விரைவில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் பதவி காலியாக இருப்பதாகவும் அந்த பதவிக்கு குஷ்புவின் பெயரும் பரிந்துரை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த பதவிக்கு ஒருவேளை குஷ்பு தேர்வு செய்யப்பட்டால் அந்த முக்கிய பதவியில் இருக்கும்போது அவர் மத்திய அரசை விமர்சனம் செய்த பழைய டுவிட்டுகள் வெளியானால் பெரும் சங்கடத்தை ஏற்படும் என்பதால்தான் குஷ்பு தரப்பினர்களே பழைய டுவிட்டுகளை காலி செய்யும் வகையில் ஏற்பாடுகளை செய்து உள்ளதாக நெட்டிசன்கள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை போகப்போகத்தான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version