கேலரி

இவ்ளோ மேக்கப் போட்டு யூஸ் இல்லயே!.. நடிகையை செமயா கலாய்த்த நெட்டிசன்கள்….

Published

on

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ டிவி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் நெஞ்சை கொள்ளை கொண்ட அழகி பவித்ர லட்சுமி. குக் வித் கோமாளியில் புகழுடன் பவித்ரா அடித்த லூட்டிகள் மூலம் புகழின் உச்சிக்கே போனார் பவித்ரா.

அந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழால் சினிமா வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. காமெடி நடிகர் சதீஷுடன் ஜோடியாக ஒரு புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்தப் புதிய படத்திற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது. இந்தப் பட வேலைகளில் பவித்ரா தற்போது பிஸியாக இருக்கிறார். ஒருபக்கம் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அல்ட்ரா மேக்கப்பில் வித்தியாசமாக போஸ் கொடுத்து அவர் டிவிட்டரில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். ஆனால், ‘நீ சைனா பொம்மை போல் இருக்க’ என ரசிகர்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

 

Trending

Exit mobile version