சினிமா செய்திகள்

சைஸ் என்ன என்று கேட்ட நெட்டிசனுக்கு சரியான பதிலடி கொடுத்த தமிழ் நடிகை!

Published

on

தமிழ் நடிகை ஒருவரிடம் சைஸ் என்ன என்று கேட்ட நெட்டிசனுக்கு சரியான பதிலடி கொடுத்த நடிகையின் பதில் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நந்திதா ஸ்வேதா என்பதும் இவர் பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் விஜய் சேதுபதியுடன் ஒரு சில படங்கள் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய்யின் ‘புலி’ படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வரும் நந்திதா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல சுவராசியமான கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென நெட்டிசன் ஒருவர் உங்களுடைய மார்பு சைஸ் என்ன? என்று கேட்க அதனால் அதிர்ச்சி அடைந்த நந்திதா ஸ்வேதா, ‘இந்த கேள்வியை உங்கள் அம்மாவிடம் அல்லது உங்கள் சகோதரியிடம் போய் கேட்டால் சரியான பதில் வரும் என்று கூறினார். நெட்டிசன் கேட்ட ஏடாகூடமான கேள்விக்கு கன்னத்தில் அறைந்த மாதிரி சரியான பதிலடி கொடுத்த நடிகை நந்திதாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் ரசிகர்கள் கேட்ட பல சுவராசியமான கேள்விகளுக்கு நந்திதா பதிலளித்தார் என்பதும் தனது சிறுவயது புகைப்படங்களையும் அவர் அதில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது நந்திதா ஸ்வேதா 2 தெலுங்கு மற்றும் 3 தமிழ் படங்களில் நடித்து வரும் பிஸியான நடிகைகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version