தொழில்நுட்பம்

இலவசமாக வீடியோ கேம்ஸ்களை விளையாடலாமே… அறிமுகப்படுத்துறது நெட்ஃப்ளிக்ஸ்!

Published

on

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் புதிதாக இலவச வீடியோ கேம்ஸ்களை தனது தளத்தில் அறிமுகப்படுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் சினிமாக்கள், சீரிஸ்கள், ஆவணப்படங்கள் என வீடியோ ரக உள்ளடக்கங்கள் மட்டுமே இதுவரையில் இருந்து வந்தன. ஆனால், இந்த ஆண்டும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தனது பெரும்பான்மையான சப்ஸ்க்ரைபர்களை இழந்துள்ளதாம். கொரோனா ஊரடங்கு தளர்வுகள் பல நாடுகளிலும் செயல்படுத்தப்பட்ட பின்னர் நெட்ஃப்ளிக்ஸ் சப்ஸ்க்ரைபர்ஸ் பலரும் ஓராண்டு கட்டணம் முடிந்தவுடன் புதுக்கவே இல்லையாம்.

நெட்ஃப்ளிக்ஸ் நடத்திய ஆய்வின்படி பலரும் வீடியோ கேம்ஸ்கள் விளையாடுவதற்கே ஆர்வம் காட்டுகின்றனராம். இதனாலே புதிதாக வீடியோ கேம்ஸ்களை அறிமுகம் செய்யலாம் என முடிவு எடுத்துள்ளது நெட்ஃப்ளிக்ஸ். மேலும், முதலில் மொபைல் வெர்ஷனில் மட்டும் இலவச வீடியோ கேம்ஸ்களை அறிமுகம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு வீடியோ கேம்ஸ் துறையின் வளர்ச்சி பன்மடங்கு இருக்கும் என ஆய்வுகள் கூறுவதால் வீடியோ கேம்ஸ் துறையில் முதலீடுகளை அதிகரிக்க உள்ளதாக நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்துள்ளது. இதன் மூலம் விரைவில் தங்களுக்கான வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர் என்றும் நெட்ஃப்ளிக்ஸ் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version