சினிமா செய்திகள்

நெட்பிளிக்ஸில் இலவசமாக படம் பார்க்கலாம்.. எப்படி?

Published

on

பிரபல நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இலவசமாகப் படங்களைப் பார்க்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே நெட்பிளிக்ஸ் தளத்தில் பணம் கட்டி சேவையைப் பெற்று வந்தாலும், தேவைப்பட்டால், பணம் கட்டாமல் அந்த இரண்டு நாட்களுக்கான சேவையை இலவசமாகப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நெட்பிளிக்ஸில் இலவசமாகப் படம் பார்க்க https://www.netflix.com/in/streamFest என்ற இணைப்பிற்குச் சென்று புதிய கணக்கை உருவாக்க வேண்டும்.

இணையதளம் அல்லது ஆண்டிராய்ட் செயலி என்று இரண்டிலும் இலவசமாக நெட்பிளிக்ஸ் சேவையை பெற முடியும். அதற்காக வங்கி கணக்கு விவரங்கள், டெபிட்/கிரெடிட் கார்டு விவரங்கள் ஏதும் வழங்கவும் தேவையில்லை. எனவே முதலில் இலவசத்தை வழங்கிவிட்டு பின்னர் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அச்சம் தேவையில்லை.

ஸ்மார்ட்போன், டிவி, டேப்ளட், லேப்டாப் அல்லது பிற ஸ்ட்ரீமிங் சாதனங்களிலும் இலவசமாகப் படம் பார்க்கலாம். ஆனால் இந்த இலவச சேவையானது 2020, டிசம்பர் 5 மற்றும் 6-ம் தேதிகளில் மட்டும்தான் கிடைக்கும். அதன் பின்பு நெட்பிளிக்ஸ் சேவையை தொடங்க விரும்பினால் மாதத்திற்கு 199 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version