சினிமா செய்திகள்

உலகிலேயே அதிக நபர்கள் நெட்ஃபிளிக்ஸ் பயன்படுத்தும் நாடு இந்தியா!

Published

on

உலகின் மிகப் பெரிய ஆன்லைன் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் இந்தியாவில் தான் அதிகப்படியாகக் கணக்குகள் உள்ளன.

இந்தியா வந்துள்ள ந்டெஃபிளிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டெட் சரந்தோஸ், 2022-ம் ஆண்டு இந்தியாவில் அதிக நபர்களை நெட்ஃபிளிக்ஸ் சந்தாதாரர்கள் ஆகியுள்ளார்கள்.

இந்தியாவிலிருந்து நெடிஃபிளிக்ஸில் வீடியோ பருக்கும் நேரம் 30 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. மேலும் நெட்ஃபிளிக்ஸ் இந்திய வருவாய் 2022-ம் ஆண்டு 25 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவில் தொடங்கப்பட்ட போது மந்தமாகவே இருந்தது. ஆனால் 2022-ம் ஆண்டு இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

2022-ம் ஆண்டு இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் வேகமாக வளர்ச்சியை அடைந்ததற்கு அதன் மொபைல் சந்தா கட்டணத்தை மதத்திற்கு ஒருவருக்கு 149 ரூபாயாகக் குறைத்தது முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த கட்டணம் 199 ரூபாயாக இருந்தது. ஆனால் அதனை மொபைல், டிவி என இரண்டிலும் பார்க்க முடியும்.

நெட்ஃபிளிக்ஸ் அடிப்படை பேக்கேஜ் சந்தா கட்டணம் மாதத்திற்கு 199 ரூபாய் (ஒருவர் மொபைல் & டிவி). ஸ்டாண்டர்ட் பேக்கேஜ் மாத சந்தா 499 ரூபாய் (இருவர் மொபைல் & டிவி). ப்ரீமியம் சந்தா 649 ரூபாய் (4 நபர்கள் மொபைல் & டிவி) என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் தங்களது பயனர்கள் கடவுச்சொல்லைப் பகிர்ந்துகொள்வதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

மேலும் நட்டத்தை தவிர்க ஊழியர்களைக் குறைப்பது, குறிப்பிட்ட சந்தாக்களுக்கு விளம்பரங்களை அறிமுகம் செய்வது போன்ற முடிவுகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version