செய்திகள்

மாத சந்தாவை அதிரடியாய் குறைத்த நெட்பிளிக்ஸ்.. இப்போது எவ்வளவு தெரியுமா?…

Published

on

டிஜிட்டல் உரிமைகளில் திரைப்படங்கள், வெப் சீரியஸ் ஆகியவற்றை ஒளிபரப்பி வரும் ஓட்டி நிறுவனம் நெட்பிளிக்ஸ். இந்த தளத்தில் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஹாலிவுட், கொரிய மற்றும் பல மொழி திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்கள் ஆகியவற்றை நாம் கண்டு களிக்க முடியும்.

இதற்கு மாத தவணை, 6 மாத தவணை, ஒரு வருட தவணை என பல சந்தாக்கள் இருக்கிறது. அதில், விரும்பியதை நாம் தேர்ந்தெடுத்து பணம் செலுத்தி நமக்கு பிடித்த படங்களை பார்க்க முடியும். அதுவும், இப்போது பல தமிழ், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவதால் இதற்கு மவுசு கூடியுள்ளது.

இந்நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது மாத சந்தாவை அதிரடியாய் குறைத்துள்ளது. மாத தவனை ரூ.199 என இருந்தது ரூ.149ஆகவும், Basic – 499 என இருந்தது ரூ. 199 ஆகவும், Standard – 649 என இருந்தது தற்போது ரூ.499 ஆகவும், Premium-799 என இருந்தது 649ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இது நெட்பிளிக்ஸ் பயன்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Trending

Exit mobile version