இந்தியா

ஒரே ஒரு அறிவிப்பு: 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்த நெட்பிளிக்ஸ்!

Published

on

ஒரே ஒரு அறிவிப்பால் 2 லட்சம் சந்தாதாரர்கள் நெட்பிளிக்ஸ் ஒடிடி நிறுவனத்தில் இருந்து வெளியேறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகில் உள்ள பல ஒடிடி நிறுவனங்களில் ஒன்று நெட்பிளிக்ஸ் என்றும் அமெரிக்காவின் இந்நிறுவனம் பல ஆண்டுகளாக தங்கள் சந்தாதாரர்களுக்கு சேவை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் உட்பட பல மொழிகளில் இந்த ஒடிடி நிறுவனம்புகழ்பெற்று விளங்குகிறது என்பதும் ரிலீஸான மற்றும் ரிலீஸ் ஆகாத படங்களை இந்நிறுவனம் ஒளிபரப்பு வருவதால் நாளுக்கு நாள் சந்தாதாரர்கள் அதிகரித்திருந்தது .

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் திடீரென சந்தாதாரர்கள் தங்களது பாஸ்வேர்டுகளை அடுத்தவர்களிடம் பகிரக்கூடாது என்றும் மீறினால் இந்த அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு நேற்று சந்தாதாரர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது .

இதனை அடுத்து நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்திலிருந்து பல சந்தாதாரர்கள் வெளியே வந்ததாகவும் 100 நாட்களில் 2 லட்சம் சந்தாதாரர்கள் வெளியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது. பல ஒடிடி நிறுவனங்களில் கணக்கு இல்லாவிட்டாலும் அந்த செயலிக்குள் சென்று என்னென்ன படங்கள் இருக்கிறது என்பதை பார்க்க முடியும். ஆனால் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தின் உள்ளே செல்ல வேண்டும் என்றாலே சந்தாதாரராக வேண்டும் என்பது அதிருப்தியை உருவாக்கியுள்ளது .

அதுமட்டுமின்றி சன் நெக்ஸ்ட்,ஹாட்ஸ்டார், ஜீ உள்பட பல நிறுவனங்கள் இலவசமாக திரைப்படங்கள் பாடல்கள் காமெடிகளை வைத்துள்ளது. ஆனால் அது மாதிரி நெட்பிளிக்ஸில் என்பதும் இல்லை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version