வணிகம்

விமானத்தில் பறக்கும் வேலை.. சம்பளம் ரூ.3 கோடி.. நெட்பிளிக்ஸ் அறிவிப்பு!

Published

on

உலகின் முன்னணி நிறுவனங்களே வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் விமான த்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்காக 3 கோடி ரூபாய் சம்பளம் தர இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

உலகின் முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் சமீபத்தில் தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களின் ஒளிபரப்பு உரிமையை பெற்றது. இதற்காக நிறுவனம் சுமார் 2000 கோடி ரூபாய் புதிதாக முதலீடு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு ஒன்று பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது பிரைவேட் ஜெட் விமானத்திற்கு ஒரு பணியாளரை தேடி வருவதாக விளம்பரம் கொடுத்துள்ளது. இந்த வேலைக்கு சம்பளம் வருடத்திற்கு 3.85 லட்சம் டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 3 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விளம்பரத்தில் விமானத்திற்கு பணியாளர் தேவை என்று கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோசியஸ் பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு பணியாற்ற வேண்டும்ன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு சேர விருப்பம் உள்ளவர்கள் சுயமாக சிந்திக்கும் திறன் இருக்க வேண்டும் என்றும், வாடிக்கையாளர்களை சிறந்த முறையில் கையாளும் திறமை இருக்க வேண்டும் என்றும், சுய விருப்பங்களுக்கு இடம் அளிக்காத ஒரு நபரை தேடி வருவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆண்டிற்கு 3 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தாலும் இந்த விண்ணப்பதாரரின் கல்வி தகுதி திறன் மற்றும் பின்னணி, அனுபவம் ஆகியவற்றை பொறுத்து சம்பளம் மாறுபடும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியின் முழு நோக்கம் என்ன? என்னென்ன பணிகள் செய்ய வேண்டும்? என்றும் விரிவாக அந்த விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் புறப்படுவதற்கு முன் காக்பெட் மற்றும் கேபின் காலரிகளில் உள்ள அவசரக்கான உபகரணங்களை ஆய்வு செய்வது, 13 கிலோ எடை வரை உள்ள பொருட்களை சுமக்கும் அளவிற்கு வலுவானவராக இருக்க வேண்டும் உள்பட ஒரு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

கலிபோர்னியாவில் பணியிடம் என்றாலும் அமெரிக்கா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கும் வகையில் வாடிக்கையாளரிடம் சிறப்பாக அணுகும் விமான உதவியாளரை தேடி வருவதாக நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version