இந்தியா

இனிமேல் மற்றவர்களின் யூசர்நேமை பயன்படுத்தி நெட்பிளிக்ஸ் பார்க்க முடியாதா?

Published

on

திரையரங்குகளுக்கு மாற்றாக தற்போது ஓடிடி அபார வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி ஒரு சில கட்டுப்பாடுகளை விதிக்க முயற்சித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஒரே ஒரு யூசர் நேம், பாஸ்வேர்டை வைத்து பல பயனாளிகள் பயன்படுத்தி வருவதாக ஓடிடி நிறுவனங்களுக்கு தகவல் வந்துள்ளது. குறிப்பாக நெட்பிளிக்ஸ் இது குறித்து ஆய்வு செய்த போது தங்களுடைய வாடிக்கையாளர்களில் 40 சதவீதம் பேர் மட்டுமே சந்தாதாரர்களாக் இருக்கிறார்கள் என்பதும் மீதி உள்ளவர்கள் மற்றவர்களின் யூசர் நேம், பாஸ்வேர்ட் ஐ பயன்படுத்தி பார்ப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து ஒரு சில கட்டுப்பாடுகளை விதிக்க நெட்பிளிக்ஸ் முடிவு செய்துள்ளது. அதன்படி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மற்றவர்களின் யூசர் நேம்-ஐ பயன்படுத்தி படம் பார்க்கும்போது உங்களுக்கு சொந்த அக்கவுண்ட் உள்ளதா? என்ற எச்சரிக்கை தோன்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இது சோதனை முறையாக மட்டுமே நடத்தப்பட்டு வருவதாக விளக்கம் நெட்பிளிக்ஸ் அளித்துள்ளது. வேறொருவரின் அக்கவுண்ட்டை பயன்படுத்தி நெட்பிளிக்ஸ்-ஐ பார்ப்பதை தவிர்க்கும் வகையில் எச்சரிக்கை அறிவிப்பு மட்டுமே வெளிவரும் என்றும் இது அனைத்து பயனாளிகளுக்கும் வராது என்றும் ஒரு சில பயனாளிகளுக்கு மட்டுமே எச்சரிக்கை விடப்படவிருப்பதாகவும் நெட்பிளிக்ஸ் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

மேலும் யூசர் அக்கவுண்ட்டை சரிபார்ப்பதற்காக தொலைபேசி எண் அல்லது இமெயில் மூலம் வெரிஃபிகேஷன் கோட் அனுப்பப்படும் என்றும் அந்த கோட்-ஐ பதிவு செய்தால் மட்டுமே நெட்பிளிக்ஸ்-இல் திரைப்படங்கள் பார்க்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Trending

Exit mobile version