இந்தியா

நெட் தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? யுஜிசி அறிக்கை

Published

on

பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வான நெட் தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியாகும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பரிலும், 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலும் நடைபெற்ற நெட் தேர்வு முடிவுக்காக அந்த தேர்வை எழுதியவர்கள் நீண்ட நாட்களாகக் காத்திருக்கின்றனர்.

கோவிட்-19 தோற்று மற்றும் சூறாவளி காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட தேர்வு முடிவுகள் ஜனவரி 30, 2022-க்குள் வெளியிடப்படும் என்றும், அதன் பின் பிப்ரவரி 15க்குள் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் 2020 டிசம்பர், 2021 ஜூன் நெட் தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியாகும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வின் முடிவுகளை யூஜிசியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரரின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி அல்லது கடவுச்சொல்லை கொண்டு பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களும் ஆன்லைனிலேயே வழங்கப்படும். இந்த சான்றிதழுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான ugcnet.nta.nic.in-ஐ விண்ணப்பதாரர்கள் கண்காணிக்க வேண்டும் என என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

seithichurul

Trending

Exit mobile version