இந்தியா

ஒரே கட்டமாக டிசம்பர் 2020 மற்றும் ஜூன் 2021 NET தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

Published

on

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த NET மற்றும் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவிருந்த NET தேர்வு ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும் ஒத்திவைக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான NET தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கான தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தேசிய தேர்வு முகமை அறிவித்த அறிவிப்பு ஒன்றில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்த வேண்டிய தேர்வு மற்றும் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்த வேண்டிய தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளும் ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகள் அக்டோபர் 6 முதல் 11ம் தேதி வரை நடைபெறும் என்றும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் இந்த தேர்வுக்கு https://ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Trending

Exit mobile version