வணிகம்

ஜிஎஸ்டி வரி நன்மையினை நுகர்வோருக்கு அளிக்காத நெஸ்ட்லே.. 100 கோடி லாபம் ஈட்டி மோசடி!

Published

on

கார்ப்ரேட் நிறுவனங்கள் முறைகேடாக அதிக லாபத்தினை ஈட்டுகின்றனவா என்று விசாரிக்கும் அமைப்பான டிஜிஏபி செய்த விசாரணையில் நெஸ்ட்லே இந்தியா நிறுவனம் ஜிஎஸ்டி மூலம் பெற்ற நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்காமல் 100 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நெஸ்ட்லே இந்தியா மேகி, நெஸ்கபே காபி, சாக்லேட், கிட்கேட், மஜ்ச், மில்கிபார், பால் பொருட்கள் மற்றும் தக்காளி கெட்சப் உள்ளிட்டவையினைத் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதில் பல பொருட்களின் விலையினை ஜிஎஸ்டி விதிகளின் படி 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நெஸ்ட்லே குறைத்து இருக்க வேண்டும். அதனைக் குறைக்காததே தற்போதைய சிக்கலுக்கான காரணம் ஆகும்.

நெஸ்ட்லே ஜிஎஸ்டி நன்மைகளை நுகர்வோருக்கு அளிக்கவில்லை என்று புகார்கள் வந்ததை அடுத்து டிஜிஏபி அமைப்பு கணக்குப் புத்தகங்களை ஆய்வு செய்ததில் 100 கோடி ரூபாய் முறைகேடாக லாபம் ஈட்டியது தெரியவந்துள்ளது.

ஆனால் அரசு ஜிஎஸ்டிக்கு வித்துள்ள விதிகள் தெளிவாக இல்லை என்று நெஸ்ட்லே உட்படப் பல நிறுவனங்கள் விமர்சித்தும் வருகின்றன.

இதற்கிடையில் நெஸ்ட்லே இந்தியா மீது அபராதம் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அபராதம் விதிக்கப்பட்டால் அதனை எதிர்த்து வழக்கு தொடருவோம் என்று நெஸ்ட்லே தரப்பில் இருந்து வந்த தகவல்கள் கூறுகின்றன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version