வீடியோ

வழக்கறிஞராக தெறிக்கவிடும் அஜித்; நேர்கொண்ட பார்வை டிரைலர் சிறப்பம்சங்கள்!

Published

on

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்திருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.

பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன பிங்க் படத்தின் ரீமேக் படமாக இருந்தாலும், அஜித்திற்காக கூடுதல் மாஸ் கூட்டியிருக்கிறார் இயக்குநர் எச். வினோத்.

வழக்கறிஞராக வாதாடும் அஜித், டிரைலரின் துவக்கத்திலேயே, ஆர் யூ எ வெர்ஜின் என மிகவும் சென்சிட்டிவிட்டியான கேள்வியை கேட்கும் இடத்திலேயே டிரைலர் பட்டாசு கிளப்புகின்றது.

அஜித்திற்கு எதிர்தரப்பு வழக்கறிஞராக தந்தி டிவி புகழ் ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். அவர் அஜித்திற்கு எதிராக பேசும் வசனங்கள் டிரைலரில் சபாஷ் சரியான போட்டி என்று சொல்லும் அளவிற்கு இருந்தாலும், அஜித்தின் மாஸுக்கு முன்னால் கொஞ்சம் கம்மி ஆகிவிடுகிறார்.

ஸ்ரத்தா ஸ்ரீநாத், டாப்ஸியை பீட் செய்யும் அளவிற்கு நடித்திருப்பாரா என்பது படத்தின் ரிலீசான ஆகஸ்ட் 10ம் தேதி தெரிந்துவிடும்.

seithichurul

Trending

Exit mobile version