உலகம்

புதிய 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை: அமைச்சரவையில் முடிவு!

Published

on

இந்தியாவில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிய 200, 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நோட்டுகளுக்கு தற்போது நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 10-ஆம் தேதி கூடிய நேபாள அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவின் ரூபாய் நோட்டுகளான 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கையில் இந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருக்க வேண்டாம் எனவும், கையில் இருக்கும் நோட்டுகளைப் பரிவர்த்தனை செய்துவிடும்படியும் நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டடுள்ளது.

ரூ.200, ரூ.500, ரூ.2000 ஆகிய இந்திய ரூபாய் நோட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவருவதும், வைத்திருப்பதும் சட்ட விரோதம். இந்த ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தாமலும், வைத்திருக்காமலும், கொண்டுவராமலும் இருக்க வேண்டும் என நேபாள தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நேபாள அரசின் இந்த தடையால் சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள், இந்தியாவில் பணிபுரியும் நேபாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்திய 100 ரூபாய் நோட்டுக்கு தடை இல்லாததால் அதனை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version