உலகம்

நியோகோவ் வைரஸால் மீண்டும் லாக்டவுனா?

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவும், ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாகவும் ஊரடங்கு பிறப்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் புதிதாக உலகம் முழுவதும் நியோகோவ் என்ற வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் இந்த வைரஸ் காரணமாக மீண்டும் உலகம் முழுவதும் லாக்டவுன் பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நியோகோவ் வைரஸ்களை ஆய்வு செய்தபோது இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் உலக சுகாதார அமைப்பு இந்த வைரஸ் குறித்து கூறிய போது இந்த நியோகோவ் வைரஸ் குறித்து ஆய்வு செய்த பின்னரே அதன் வீரியம் தன்மை குறித்து தெரியவரும் என்றும் இப்போதைக்கு இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளது.

ஆனால் சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் நியோகோவ் வைரஸ் கடந்த 2012ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் அறியப்பட்டது என்றும் தற்போது இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் இது ஒமிக்ரான் வைரசை விட வேகமாக பரவும் என்றும் கூறி உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் உலகில் உள்ள மற்ற விஞ்ஞானிகள் நியோகோவ் வைரஸ் மனிதர்களுக்கு தொற்றக்கூடிய வடிவில் இல்லை என்றும் அது உருமாற்றம் அடையும் போது வேண்டுமானால் மனிதர்களுக்கு தீங்கு ஏற்படலாம் என்றும் எனவே இப்போதைக்கு நியோகோவ் வைரஸ் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.

நியோகோவ் வைரஸ் குறித்து மாறி மாறி தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை நியோகோவ் வைரசால் லாக்டவுன் வந்து விடக்கூடாது என்பதே அனைத்து மக்களின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version