சினிமா செய்திகள்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா ஹிட்டா? ஃபிளாப்பா?

Published

on

யூடியூபில் இருந்து வளர்ந்து வெள்ளித்திரையில் தரமான திரைப்படத்தை கொடுத்துள்ள பிளாக்‌ஷிப் டீமின் முயற்சிக்கு முதலில் வாழ்த்துகள்.. சரி சிவகார்த்திகேயன் இரண்டாவது தயாரிப்பு படமான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா எப்படி இருக்குது என்பதை பார்ப்போம்.

படம் எப்படி இருக்கு?

ஸ்மைல் சேட்டை என்ற யூடியூப் சேனலில் இருந்து தங்களது வாழ்க்கையை தொடங்கிய கார்த்திக் வேணுகோபால் மற்றும் விக்னேஷ்காந்த், தற்போது பிளாக்‌ஷிப் எனும் யூடியூபை நடத்தி வருகின்றனர். ஒரு யூடியூபர் படம் இயக்குவதால், யூடியூப் வீடியோ போலவே படம் வெளிவந்துள்ளது.

கனா படத்தை போல இந்த படம் பெரிய பட்ஜெட் படம் என்று சொல்ல முடியாது. இந்த படத்திற்கு தேவையான பட்ஜெட்டை சிவகார்த்திகேயன் ஒதுக்கியுள்ளார். காமெடி பிளஸ் கருத்து என்பதை கற்கவும் கலாய்க்கவும் எனும் தாரக மந்திரம் கொண்டு இயங்கி வரும் பிளாக்‌ஷிப் டீம், இந்த படத்தை ஆரம்பத்தில் இருந்து காமெடியாக கொண்டு போய், சில இடங்களில் மொக்கை காமெடியும் சிதறியுள்ளது. ஆனால், கடைசியில் கிளைமேக்ஸில் ஒரு நல்ல மெசேஜுடன் படத்தை முடித்து, பாராட்டுக்களை அள்ளிவிட்டார் இயக்குநர் கார்த்திக் வேணுகோபால்.

சன் மியூசிக்கில் வீஜேவாக வந்து பின்னர் சரவணன் மீனாட்சி சீரியல் மற்றும் விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வந்த ரியோ ராஜ் இந்த படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

தன்னைப் போலவே டிவி பெட்டியில் பிரபலமான ஒருவரை சினிமாவுக்கு அழைத்த வந்த இடத்தில் சிவகார்த்திகேயன் சாதித்துள்ளார்.

கதைக்களம்:

ஃபன் பண்றோம் டீம் செய்யும் பிரான்க் காமெடி ஷோவை யூடியூபர்களான ரியோ மற்றும் விக்னேஷ் காந்த் செய்து வருகின்றனர். அப்போது ஒரு பெரிய மாலில் நாயகி ஷெரின் கான்ச்வாலா கழுத்தில் கத்தி வைத்து மிரட்டுவது போல, பிரான்க் செய்யும் இவர்களின் தைரியத்தை கண்டு வியக்கும் ராதாரவி, உங்களுக்கு என்ன வேண்டும் ஏன் இவ்ளோ ரிஸ்க் எடுக்குறீங்க என கேட்க, பணம் தான் சார் வேணும்னு ரியோ சொல்கிறார்.

சரி உங்களுக்கு கோடி கணக்கில் பணம் கொடுக்கிறேன், ஆனால், நான் சொல்லும் 3 டாஸ்க்குகளை நீங்கள் செய்ய வேண்டும் என ராதாரவி படத்தை ஆரம்பித்து வைகக், அந்த 3 டாஸ்க்குகள் என்ன என்ன? அதிலும் உயிருக்கே ஆபத்தான அந்த 3வது டாஸ்க்கை நாயகன் எப்படி செய்தாரா இல்லையா? பணத்தின் மீது கொண்ட ஆசையால் சமூதாயத்தில் நடக்கும் கொடுமைகள் மற்றும் அரசியல் நய்யாண்டி என படம் முழுவதும் ரசிக்கும் படியாக செல்கிறது.

ஷபிர் இசை படத்தின் பின்னணிக்கு பெரிதும் உதவுகிறது. ஆனால், பாடல்கள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அதே போல நாயகி ஷெரின் கதைக்கு தேவையில்லாத ஒன்றாகவே வந்து செல்வதை தவிர்த்திருக்கலாம்.

பல யூடியூபர்கள் வரும் இண்டர்நெட் பசங்க, மற்றும் நாஞ்சில் சம்பத் வரும் இடங்களில் தியேட்டரில் விசில் சத்தம் பறக்கிறது.
குடும்பத்துடன் அனைவரும் பார்க்கும் படமாக இந்த படம் வந்துள்ளது.

சினி ரேட்டிங்: 3.25/5.

seithichurul

Trending

Exit mobile version