சினிமா செய்திகள்

ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்ட ‘நெஞ்சம் மறப்பதில்லை’: ரசிகர்கள் மகிழ்ச்சி!

Published

on

செல்வராகவன் இயக்கிய ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படம் மார்ச் 5ஆம் தேதி ரிலீஸாகும் என கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் நேற்று திடீரென நீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக ஒரு செய்தி ஊடகங்களில் பரவியது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி திட்டமிட்டபடி மார்ச் 5ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் இந்த படத்திற்கான அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இன்று முதல் இந்த படத்தின் முன்பதிவும் தொடங்குவதாக முக்கிய திரையரங்குகள் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நெஞ்சம் மறப்பதில்லை திட்டமிட்டபடி வரும் 5-ஆம் தேதி ரிலீசாகிறது.

எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version