விமர்சனம்

பேயிக்கும் சாமிக்கும் சண்டை… அதுல யாரு ஜெயிச்சா… நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்..!

Published

on

நீண்ட வருஷத்துக்குப் பிறகு செல்வா சார் (அப்படித்தான் சொல்லணுமான். செல்வராகவன்னு சொல்ல கூடாதுன்னு செல்வா சாரே சொல்லியிருக்கார்) நெஞ்சம் மறப்பதில்லை. சொத்துக்காக பணக்காரப் பெண்ணான ஸ்வேதாவை (நந்திதா) திருமணம் செய்து கொள்ளும் காஜி பிடிச்ச ராம்சே (எ) ராமசாமி (எஸ்.ஜே.சூர்யா) பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துவிடுகிறார். அதுக்குப் பின்னாடி என்ன நடக்குது என்பதுதான் செல்வா ஸ்டைலில் சொல்லியிருக்கும் ஜெமினி கால படம்…

ராம்சே (எ) ராமசாமி-யாக எஸ்.ஜே.சூர்யா ‘கொய்யால கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா’ என்று சொல்லும் அளவுக்கு நடித்துக் குமித்திருக்கிறார். பல இடங்களில் அது அட்டகாசமும் சில இடங்களில் கொஞ்சம் துறுத்தலாகவும் தெரிகிறது. “ரொம்ப்ப்ப நடக்கிறாண்டா… டாய் சும்மா இயல்பா நடிடா” என்று சொல்லும் அளவுக்கு நடித்து தள்ளியிருக்கிறார். இவரை தவிர இந்தப்படத்தில் வரும் மீதம் இருக்கும் பத்து கதாபாத்திரங்கள்தான். பேபி சிட்டர் மரியமாக ரெஜினா. அன்பே உருவான கதாபாத்திரம் டூ பழிவாங்கும் காட்சி வரை சிறப்பாக நடித்திருக்கிறார். செல்வராகவன் சொன்னதில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு நடித்திருப்பவர் இவர் மட்டும்தான். பணக்காரப் பாசக்காரியாக, கோவக்காரியாக, சரக்குகாரியாக செல்வராகவன் ட்ரேட் மார்க் கதாநாயகியாக வந்து போயிருக்கிறார் நந்திதா தாஸ். எஸ்.ஜே. சூர்யாவின் நண்பராக வரும் சிவகுமாரும், சர்ச் சிஸ்டராக வரும் கமலா கிருஷ்ணசாமி ஓரளவு கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். இன்னும் மூவர் மட்டும்தான் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு முக்கியத்துவம் இல்லாத பாத்திரங்கள் பரவாயில்லை என்ற ரகம் தான்.


இசை யுவன்சங்கர் ராஜா… செல்வராகவனோடு இணையும் போது ஒரு மேஜிக் உருவாகும். ஆனால், அதர பழசான மேஜிக் இங்கே நம்மை கடுமையாக சோதித்திருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் செல்வராகவன் – யுவன்சங்கர் ராஜா கூட்டணியில் வெளியான அனைத்துப் படங்களின் பி.ஜி.எம்.களும் காதுக்குள் வந்து போகின்றன. பாடல்கள் புரியவில்லை என்றாலும் “கண்ணுங்களா என் செல்லங்களா… என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா” ரெண்டு பாடல்கள் காட்சிப்படுத்தப்பட்ட விதத்தில் கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்க்கணும். திரும்பி வாங்க யுவன் நண்பா… படத்தில் சிறப்பாக இருப்பது அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு சூப்பர். முடிந்த அளவு நல்ல லைட்டிங்… வித்யாசமான ப்ரேம்களை வைத்து அசத்தியிருக்கிறார். ஒலிப்பதிவு கைவிட்ட செல்வா சாருக்கு ஓரளவு ஒளிப்பதிவு கைகொடுக்கிறது.

கொல்லப்பட்ட பெண் பேய் பழி வாங்கும் கதை. ஆனால், அதை சொல்ல நினைத்தவிதம் சூப்பர். மேக்கிங் நல்லா இருக்கு. ஆனால், ஓரளவுக்கு மேல் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு படத்திலும் கதை சொல்லும் விதத்தில் மட்டும் தனித்தன்மையை காட்டினால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் போல செல்வா சார். என்ன செல்வா சார் எங்கள வச்சு learning ஆ… என்று கேட்கத் தோணுகிறது. முற்பாதி ஓ.கே. பிற்பாதில் போலீஸ் ஸ்டேசன்ல வரும் அந்த ஒரு பாட்டு வரை ஓ.கே. அதுப்பிறகு தான் குழந்தைகளுக்கு சொல்லும் பூச்சாண்டி கதைகளைப் போல சுத்த ஆரம்பித்திருக்கிறார் செல்வா சார்…
செல்வா சார்… யுவன் சங்கர் ராஜா… கூட்டணி. பல எதிர்ப்புகளுக்கு இடையே வெளியான படம் என்ற எதிர்ப்பார்ப்பில் சென்றால் படம் நம்மை வலுவாக ஏமாற்றி அனுப்புகிறது.

செல்வா சார் ரசிகர்கள் சொல்வது போல இன்னும் 5 வருஷம் கழிச்சுப் பார்த்தால் இந்தப் படம் ஓரளவு புரிந்தாலும் புரியலாம்… அலோ பத்து வரும் கழிச்சு பாக்கணும்னு நீங்க சொல்றது கேக்குது. அதான் இந்தப் படம் எடுத்து அல்ரெடு அஞ்சு வரும் ஆயிடுச்சுல. அப்போ நான் சொல்ற கணக்கு சரிதானே… சும்மா இருங்கடே… learnig ஆ… நண்பா…

seithichurul

Trending

Exit mobile version