சினிமா செய்திகள்

நாளை விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நெல்சன்!

Published

on

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் தமிழ் புத்தாண்டு விருந்தாக ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில், இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறது .

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் டீசர் டிரைலர் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என தகவல்கள் கசிந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’நாளை’ என்ற ஒரே ஒரு வார்த்தையை மட்டும் பதிவு செய்துள்ளார் .

இதனை அடுத்து நாளை இந்த படத்தின் டீசர் அல்லது டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ‘பீஸ்ட்’ படத்துடன் வெளியாகும் கேஜிஎப் 2 படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் டிரெய்லர் அதைவிட அசத்தலாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் படக்குழுவினருக்கு இருந்ததாக கூறப்படுகிறது.

விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு. அனிருத் இசையமைத்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version