சினிமா செய்திகள்

’தளபதி 65’ படத்தின் லொகேஷன்கள்: இயக்குனர் நெல்சன் பகிர்ந்த புகைப்படங்கள்!

Published

on

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளியாகி ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் அவர் நடிக்கயிருக்கும் 65வது திரைப்படத்தை நெல்சன் இயக்க இருப்பதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான லொகேஷன் பார்க்கும் பணிகளுக்காக இயக்குனர் நெல்சன் ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்யாவில் அவர் முக்கிய இடங்களில் லொகேஷன் பார்த்து படப்பிடிப்பிற்கான அனுமதியையும் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இயக்குனர் நெல்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஷ்யாவில் உள்ள முக்கிய பகுதிகளில் உள்ள லொகேஷன்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. ஏற்கனவே தளபதி 65 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் தான் நடைபெறும் என்று செய்திகள் வந்த நிலையில் தற்போது அவர் பதிவு செய்திருக்கும் லோகேஷன் புகைப்படங்கள் இந்த தகவலை உறுதி செய்துள்ளன.

விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் ‘பேட்ட’ வில்லன் நவாசுதீன் என்பவர் வில்லனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் படப்பிடிப்பு தொடங்கும் நாளில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த விரிவான தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version