சினிமா செய்திகள்

நெல்சன் அன்றே சொன்னார்: வைரல் வீடியோ

Published

on

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தை இயக்கியுள்ள நெல்சனுக்கு கடுமையான விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் இந்த படம் எப்படி இருக்கும் என்பதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்சன் கூறிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பிரபல ஊடகம் ஒன்று ஏற்பாடு செய்த முக்கிய இயக்குனர்களின் கலந்துரையாடலில் இயக்குனர் நெல்சனும் கலந்து கொண்டனர். அதில் நாம் நினைக்கும் வகையில் படமெடுக்க ஹீரோக்கள் ஒத்து கொள்ள மாட்டார்கள் என்று அவர் கூறினார். மேலும் நமக்கு என்று ஒரு ஸ்டைலில் படம் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்போம். அதுவும் கமர்ஷியல் படமும் டோட்டலாக வேறு மாதிரி இருக்கும். இவை இரண்டையும் ஒன்றினைக்க முடியாது.

எனவே நாம் ஹீரோவை அப்ரோச் செய்து ஒரு படம் பண்ண வேண்டும் என்றால் நமக்கான ஸ்டைலையும் அவர்களுக்கு இருக்கும் இமேஜையும் ஒரு புள்ளியில் இணைக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு கமர்சியல் படம் வரும் என்று கூறியுள்ளார்.

நெல்சனின் இந்த பேட்டியில் இருந்து ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்யின் தலையீடு இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version