சினிமா செய்திகள்

’பீஸ்ட்’ சொதப்பலுக்கு நெல்சன் மட்டுமே காரணமா?

Published

on

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் இன்று வெளியாகி நெகடிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் அனைத்து விமர்சனங்களும் நெல்சன் மீது மட்டுமே வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நெல்சன் கூறிய கதையை கேட்டு முழுமையாக திருப்தி அடைந்த பின்னர்தான் விஜய் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக ஆரம்பத்தில் தகவல் வெளி வந்த நிலையில் தற்போது பழி அனைத்துமே நெல்சன் மீது போடப்பட்டுள்ளது.

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய இரண்டு படங்களில் இருந்து நெல்சன் எவ்வளவு பெரிய திறமையான இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் இந்த படத்தில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க படாததால் தான் ’பீஸ்ட்’ திரைப்படம் சொதப்பலாக இருக்கிறது என்று திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

விஜய்யின் தலையீடு, சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலையீடு உள்ளிட்ட பல பிரச்சினைகளால் நெல்சன் தான் நினைத்தபடி படம் எடுக்க முடியவில்லை என்றும் அதனால்தான் படம் சொதப்பலாக உள்ளது என்றும் இதற்கு முழுக்க முழுக்க நெல்சனை குறை கூற முடியாது என்றும் திரையுலக வட்டாரங்கள் கூறிவருகின்றன .

இதனை அடுத்து நெல்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தலைவர் 169’ படத்தில் தனது முழு திறமையை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version