சினிமா செய்திகள்

விஜய்யுடன் டான்ஸ் ஆடிய நெல்சன், அனிருத்: ‘பீஸ்ட்’ பட சூப்பர் தகவல்!

Published

on

தளபதி விஜய் நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணாதாஸ் ஆகிய இருவருமே தங்களது பகுதியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறி சென்னையை விட்டு கிளம்பி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி குறித்த ஆச்சரியமான தகவல் வெளிவந்துள்ளது. ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் விஜய்யுடன் இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவரும் ஒரு சில காட்சிகளில் நடனமாடி உள்ளதாகவும் இந்த காட்சியை சமீபத்தில் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே விஜய் உடன் அவரை இயக்கும் இயக்குனர்கள் ஒரு சில காட்சிகளில் தோன்றுவது வழக்கமான ஒன்றுதான். பிகில் படத்தில் கூட விஜய்யுடன் ஏஆர் ரகுமான் மற்றும் அட்லி ஆகியோர் தோன்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ‘பீஸ்ட்’ படத்திலும் விஜய் உடன் அனிருத் மற்றும் நெல்சன் ஆடி இருப்பதாக வந்த தகவலை விஜய் ரசிகர்களுக்கு பெரும் குஷியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version