தமிழ்நாடு

பிரபல ஜோதிடர் நெல்லை வசந்தன் மாரடைப்பால் காலமானார்!

Published

on

பிரபல ஜோதிடர் நெல்லை வசந்தன் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் இருந்த வசந்தன் ஜோதிடராக அறியப்பட்டு வரும் நிலையில் அவர் நெல்லை வசந்தன் என்று அழைக்கப்பட்டு வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மற்றும் ராசிபலன் கணிப்புகளை கூறுவதில் அவர் வல்லவர் என்றும் தமிழகத்தில் நிகழும் சம்பவங்கள் மற்றும் நிகழப் போகும் சம்பவங்கள் குறித்து பலமுறை அவர் பேட்டி அளித்துள்ளார் என்றும் அவைகளில் பெரும்பாலானவை துல்லியமாக நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நெல்லை வசந்தன் அவர்களுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் இன்று காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு ஜோதிட உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சென்னை உள்பட தமிழகத்தில் பெய்த கன மழையை முன்கூட்டியே நெல்லை வசந்தன் கணித்திருந்தார் என்பதும் கடகராசிக்கு கண்டச்சனி காலமாக இருப்பதால் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வெள்ளம் ஏற்படும் என்று அவர் கணித்தது சரியாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை வசந்தன் மறைவுக்கு திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிடர் பாலாஜி ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

எனது குருநாதர்
திரு நெல்லை வசந்தன் அவர்கள்

இன்று அதிகாலை மாரடைப்பால்
இறந்துவிட்டார்.

ஜோதிட உலகில்
தலை சிறந்த ஞானி,
ஜோதிட துறைக்காக தனது 45 ஆண்டு காலத்தை அர்ப்பணித்தவர்,
எண்ணற்ற நூல்களை எழுதியவர்

இன்று இறந்துவிட்டார் இவரது இறப்பு.
ஜோதிட துறைக்கே ஈடுசெய்ய முடியாத இழப்பு.

 

seithichurul

Trending

Exit mobile version