வீடியோ
நீயா 2 டிரைலர் ரிலீஸ்!
கமல், ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979ம் ஆண்டு வெளியான நீயா படத்தின் இரண்டாம் பாகம் எனும் பெயரில் நீயா 2 என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது.
நடிகர் ஜெய், லக்ஷ்மிராய், வரலட்சுமி சரத்குமார், கேத்ரின் தெரசா என பலர் நடித்திருக்கும் இப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது.
நாகின் என்ற இந்தி படத்தின் ரீமேக்காகத்தான் கமலின் நீயா படமே வெளிவந்தது. சமீபத்தில், தமிழ் தொலைக்காட்சிகளில் வெளியான இந்தி சீரியலான நாகினி மற்றும் தமிழ் சீரியலான நந்தினியின் தொடர்ச்சியாக இந்த நீயா 2வை உருவாக்கி இருப்பது போலவே இதன் டிரைலரை பார்த்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாம்பு என்றால் படையே நடுங்கும் ஹாரர் மூவியாக வரும் காலம் மாறி, பாம்பு படம் மூன்று ஹீரோயின்களின் கவர்ச்சி படமாகவே எடுக்கப்பட்டுள்ளது இதன் பட அறிவிப்பின் போதே கணித்து விடும் ரகமாகாத்தான் இருக்கிறது.
நல்ல நடிகர் ஜெய்க்கு, நிச்சயம் இந்த படம் ஒரு கம்பேக்காக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.