தமிழ்நாடு

பிக் பிரேக்கிங் நியூஸ்: நீட் தேர்வு முடிவால் தமிழகத்தில் 2 மாணவிகள் தற்கொலை!

Published

on

மருத்துவப்படிப்புகளுக்கு 12-ஆம் வகுப்பு கட் ஆஃப் மதிப்பெண் வைத்து மாணவர் சேர்க்கை செய்துவந்தது மாற்றி அமைக்கப்பட்டு நாடு முழுவதும் ஒரே முறையாக நீட் தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தாலும் நீட் தேர்வு தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஓவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு முடிவின் போது தமிழகத்தில் உயிரிழப்புகள் ஏற்படத்தான் செய்கின்றன.

குறிப்பாக நீட் தேர்வால் தனது மருத்துவர் ஆகும் கனவு நிறைவேறாமல் போனதால் அரியலூர் ஏழை மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலமுறை இதற்கு எதிராக போராட்டங்கள் நடந்தாலும் நீட் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன, அதேப்போல மாணவிகள் தற்கொலையும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டு மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த ரிதுஸ்ரீ என்ற மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு மாணவியும் நீட் தேர்வு முடிவால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த வைஷியா என்ற மாணவி வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த அடுத்தடுத்த இரண்டு தற்கொலைகளும் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version