தமிழ்நாடு

நீட் தேர்வில் இருமுறை தோல்வி: பெரம்பலூர் மாணவி தற்கொலை!

Published

on

நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வியை தழுவியதால் பெரம்பலூரை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பலூரை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பேருந்து நடத்துநரின் மகள் கீர்த்தனா கடந்த 2018-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு படிப்பை முடித்தார். 12-ஆம் வகுப்பில் 1053 மதிப்பெண் எடுத்த கீர்த்தனா மருத்துவராக வேண்டும் என்ற கனவில் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். ஆனால் அவரால் 720 மதிப்பெண்களுக்கு 204 மதிப்பெண்கள் தான் எடுக்க முடிந்தது. இதனால் தோல்வியுற்றார் கீர்த்தனா சென்னையில் தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் தேர்வுக்காகப் பயிற்சி பெற்றார்.

ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் அவரால் 384 மதிப்பெண்கள் பெறமுடிந்தது. இதனால் இந்த ஆண்டும் அவரால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. மருத்துவப் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு நேற்று முன்தினமும், இரண்டாம்கட்ட கலந்தாய்வு நேற்றும் முடிவடைந்துள்ள நிலையில் இறுதி வரை காத்திருந்தார் கீர்த்தனா மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் மருத்துவ இடம் கிடைக்காத விரக்தியில் நேற்று தற்கொலை செய்து கொண்டார் கீர்த்தனா.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது ஒவ்வொரு ஆண்டும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இது தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மக்களின் குரலை மத்தியில் உள்ளவர்கள் எப்பொழுதுதான் கேட்பார்களோ.

seithichurul

Trending

Exit mobile version