தமிழ்நாடு

நீட் விலக்கு மசோதா: விஜயபாஸ்கர் – மா சுப்பிரமணியன் காரசார வாதம்!

Published

on

தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த மசோதா குறித்து பல்வேறு கட்சிகளின் எம்எல்ஏக்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

இந்த நிலையில் நீட் விலக்கு மசோதா குறித்து பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள், ‘ நீட் என்ற சிஸ்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான் என்று தெரிவித்தார்

இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, ‘1984ஆம் ஆண்டு நுழைவுதேர்வை கொண்டு வந்தது யாருடைய ஆட்சி என்று கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் மருத்துவ படிப்பு கிராமப்புற மாணவர்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதற்காக 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுக அரசுதான் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். மேலும் 2005ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வு வேண்டாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் என்று கூறினார். அப்போது அப்போது விஜய் பாஸ்கர் கருத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்து காரசாரமாக பேசினார்

இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை ஒரு வருடம் அதிமுக அரசு மறைத்து வைத்திருந்தது என்றும், ஆனால், திமுக அரசு உடனடியாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் முதல்வர் ஸ்டால்லின் கூறினார்.

இதனையடுத்து நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது என்பது எல்லாருக்கும் தெரியும் என்றும், ஆனால் நீட் தேர்வு அதிமுக ஆட்சியில் அமல்படுத்தியது போல் பொய் பிரச்சாரம் செய்கின்றனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். இவ்வாறு நீட் தேர்வு குறித்து உறுப்பினர்கள் காரசாரமாக விவாதம் செய்தனர்.

seithichurul

Trending

Exit mobile version