இந்தியா

நீட் தேர்வு எழுதும் நேரம் நீட்டிப்பு: காரணம் கூறிய தேசிய தேர்வு முகமை!

Published

on

நீட் தேர்வு எழுதும் நேரம் நீடிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை சற்றுமுன் அறிவித்துள்ளது.

இளங்கலை மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு எழுதுவதற்கான நேரம் இதுவரை மூன்று மணி நேரம் இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தற்போது இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு எழுதுவதற்கான நேரம் 20 நிமிடங்கள் நீடித்து உள்ளதாகவும் இதனை அடுத்து நடப்பாண்டு முதல் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நீட் தேர்வு நடைபெறும் தேதி தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.

நீட் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும் நிலையில் ஒரு கேள்விக்கு ஒரு நிமிடம் என்ற வகையில் 20 நிமிடங்கள் மாணவர்களுக்கு அளிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

நடப்பாண்டு நீட் தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது என்றும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி மே 6-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version