இந்தியா

நீட் தேர்வில் அதிரடி மாற்றம்: 35 கட்டாய கேள்விகள்!

Published

on

இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு உண்டு என்று உறுதி செய்யப்பட்டு செப்டம்பர் 12ஆம் தேதி அந்த தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வில் கேள்விகள் இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் 35 கேள்விகளும் இரண்டாவது பகுதியில் 15 கேள்விகளும் கேட்கப்படும். முதல் பகுதியில் உள்ள 35 கேள்விகளுக்கும் கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது பகுதியில் உள்ள 15 கேள்விகளில் 10 கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய நான்கு பிரிவுகளில் 45 மதிப்பெண்களுக்கு 45 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றம் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் நீட் தேர்வின் விண்ணப்பங்களும் 2 முறையாக பின்பற்றப்படுகிறது. நீட் தேர்வுக்கு முந்தைய விண்ணப்பத்தில் மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்றும், நீட் தேர்வுக்கு பின் பதிவு செய்யும் விண்ணப்பத்தில் பெற்றோரின் வருமானம், இருப்பிடம், ஆகிய விவரங்களும் பெற்றோர்களின் கல்வி விவரங்களும் கேட்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வு தமிழ் தெலுங்கு உருது உள்பட 13 மொழிகளில் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும் நீட் தேர்வில் இரு மாணவர்கள் ஒரே மதிப்பெண்கள் எடுத்தால் அவரது அவர்களது வயதை கணக்கில் கொண்டு தேர்வு செய்யும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் ஒபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவை தேசிய மருத்துவ நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் மட்டும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version