இந்தியா

நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: இணையதளங்களின் விபரங்கள்!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும், இந்த தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தேசிய தேர்வு முகமை சிறப்பாக செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு எழுத வரும் மாணவ மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து செப்டம்பர் 9-ஆம் தேதி நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று செய்திகள் வெளியானது. ஆனால் சற்று முன்னர் வெளியான தகவலின் படி இன்று நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது என்றும், தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இந்த ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் செப்டம்பர் 11 ஆம் தேதி முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து அந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுக்களயும் மாணவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை என்ற neet.nta.nic.in என்ற இணையதளத்திலும் முதுநிலை நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை nbe.edu.in என்ற இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை சற்றுமுன் அறிவித்துள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version